Wednesday, April 16, 2008

உள்ளூர்காரர்களுக்கு டிக்கெட் வழங்காததைக் கண்டித்து பா.ஜனதா அலுவலகத்திற்கு பூட்டு.

ஹாசன், ஏப். 16-தேர்தலில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்காததைக் கண்டித்து ஹாசனில் பா.ஜனதா தொண்டர்கள் அக்கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

அதிருப்தி

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே, கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அது போல பா.ஜனதா கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

பா.ஜனதா கட்சியினர் இது வரை 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இந்த 2வேட்பாளர் பட்டியல்களும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல், புதியவர்களுக்கும், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படுகிறது என்று கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உள்ளூர் வேட்பாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் வர்கள் பா.ஜனதா வேட்பாளருக்கு போட்டியாக நிற்கப் போவதாக கூறி வருகின்றனர். மேலும் பா.ஜனதா மேலிடத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

அது போல ஹாசன் மாவட்டத்திலும் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இங்கு கட்சியில் நீண்ட காலம் இருக்கும் உண்மையான தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறி வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Free Blog CounterLG