ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. தன்வீர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதினது.
டாஸ் வென்ற சென்னை அணி தலைவர் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.தொடக்க வீரர்களாக பார்த்தீவ் பட்டேலும், ஸ்டீபன் பிளமிங்கும் களம் இறங்கினர். தன்வீர் வீசிய முதல் பந்திலேயே பார்த்தீவ் பட்டேல் எல்.பி.டபிள்யூ. ஆகி ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் 5-வது பந்தில் பிளமிங்கும் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார். ரன் எடுப்பதற்குள் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.இதைத் தொடர்ந்து தன்வீரின் 3-வது ஓவரில் வித்யுத்தும் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். பத்ரிநாத் 15 ரன்னிலும், தோனி 1 ரன்னிலும் அவுட்டானார்கள். 44 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணி, 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் ரெய்னா, அல்பி மோர்கல் இணை அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.அணியின் எண்ணிக்கை 88ஆக இருந்தபோது ரெய்னா 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜோகிந்தர் ஷர்மா ரன் எடுக்காமல் அவுட்டானார். மோர்கல் 42 ரன்னிலும், முரளிதரன் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அப்போது சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது.பின்னர் வந்த நிட்னி 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். 19 ஓவர்களில் சென்னை அணி 109 ரன்களுக்கு சுருண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இது 2-வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் அணி 82 ரன்களில் ஆட்டமிழந்தது இதுவரை குறைந்தபட்ச எண்ணிக்கையாக உள்ளது.4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தன்வீர். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது தான் ஓர் வீரரின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.
110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. 6 ரன் ஸ்மித் எடுத்திருந்தபோது அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை ஜோகிந்தர் ஷர்மா நழுவ விட்டார். முதல் விக்கெட்டுக்கு ஸ்மித்- அஸ்னோட்கர் இணை 78 ரன்கள் சேர்த்தது. அஸ்னோட்கர் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த யூசுப்பதான் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.ஸ்மித் 35 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.ஆட்ட நாயகனாக தன்வீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றியாகும். சென்னை அணிக்கு இது 2வது தோல்வியாகும்.
0 comments:
Post a Comment