Monday, May 5, 2008

மைக்ரோசாப்டின் பின்வாங்கலுக்குப் பிறகு யாகூவின் பங்கு 16 சதவீதம் சரிந்தது

யாகூவை வாங்கும் எண்ணத்தை கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாப்ட் பின்வாங்கியதைத் தொடர்ந்து யாகூவின் பங்குச்சரிவு எவ்வளவு இருக்கும் என்கிற கணிப்புக்கு திங்கட்கிழமை காலை முடிவு தெரிந்திருக்கிறது.

யாகூவின் பங்கு ஒன்றுக்கு 33$ வீதம் மைக்ரோசாப்ட் நிர்ணயித்திருந்தது. விடாகொண்டனாக இருந்த யாகூ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த வெள்ளியன்று 28.67$ ஆக இருந்த அதன் மதிப்பு இன்று 16 சதவீதம் குறைந்து 23.92$ க்கு வந்துள்ளது.

இதனிடையே யாகூவின் பங்குக்குஅதிக விலை கொடுப்பதிலிருந்து மைக்ரோசாப்ட் பின்வாங்கியதால் அதன் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர் இதன் காரணமாக அதன் மதிப்பு 2 சதவீதம் உயர்ந்து கடந்த வெள்ளியன்று 29.24 டாலராக இருந்ததிலிருந்து 30 டாலருக்கு உயர்ந்துள்ளது.

அதே போல் கூகிளின் மதிப்பும் 2 சதவீதம் உயர்ந்து 595 டாலர்களை அடைந்தது.

முன்னதாக, கடந்த ஜனவரி 31 அன்று மைக்ரோசாப்ட் தன்னிச்சையாக யாகூவை வாங்குவதைப் பற்றி அறிந்ததும் யாகூவின் பங்கின் விலை 19.18 டாலர் அளவிற்கு நான்கு ஆண்டுகால வீழ்ச்சியை சந்தித்தது.

மைக்ரோசாப்டின் முடிவு பற்றி அறிந்த யாகூவின் முக்கிய நபர்கள் ஐவர் தங்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ஜெரி யாங் (CEO) கூறுகையில் தங்கள் நிறுவன பங்கின் விலை ஒன்றிற்கு 37 டாலர் வரை மதிப்பிட்டிருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார்.

0 comments:

Free Blog CounterLG