Wednesday, May 28, 2008

நேபாளம் குடியரசாக அறிவிப்பு

நேபாளில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் கடுமையாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான உள்நாட்டுப்போரில் இதுவரை 13000 பேர் இறந்திருக்கின்றனர். பின்னர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசிற்கும் கடந்த 2006ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதனையொட்டி, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் 220 பரதிநிதிகளை பெற்றனர்.

இன்று புதன்கிழமை கூடிய பாராளுமன்றம் மன்னராட்சிக்கு முடிவுகட்டி நேபாளத்தை குடியரசு நாடாக அறிவித்தது. கடந்த 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்துள்ளது.

குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னரின் மாளிகையை காலி செய்ய மன்னர் ஞானேந்திராவிற்கு 15 நாட்கள் கெடு விதித்துள்ளது. மன்னர் இதுபற்றி இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், 'அதற்கு அவர் சம்மதிக்கவில்லையாயின், அப்புறப்படுத்தப்படுவார், அது அவருக்கு நல்லதல்ல ' என்று அமைதி மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் கூறினார்.

நம்பிக்கை

நேபாளம் இந்து நாடாக இருந்து வருகிறது. இந்நாட்டின் மன்னரை கடவுளின் வாரிசாக அந்நாட்டு மக்கள் நம்பிவந்தனர். ஆனால் 2001 ஆம் ஆண்டு இளவரசர் திபேந்திரா மன்னர் பிரேந்திராவையும் இன்னும் அவருடைய குடும்பத்தினர் எட்டு பேரையும் சுற்றுக்கொண்டார். பின்னர் தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் ஞானேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார். 2005 அரசாங்கத்தை கலைத்து மன்னர் தன்கீழ் எடுத்துக்கொண்டார்.

0 comments:

Free Blog CounterLG