விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகள், அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அவற்றை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் வலியுறுத்தி உள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று டி.சுதர்சனம் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சில கட்சிகளும், அமைப்புகளும் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அத்தகைய அமைப்புகளையும், கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.
மனிதநேயத்தோடும், அறநெறியோடும் காவல்துறை செயல்பட வேண்டும். காவிஉடை தெய்வபக்திக்கு அடையாளம். கதர் உடை தேசபக்திக்கு அடையாளம். அதேபோல காக்கி உடை கடமைக்கு அடையாளம். காவல்துறை தவறு செய்தால் அது முதலமைச்சரை தான் பாதிக்கும். எனவே இந்த துறை கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் என் சுதர்சனம் கேட்டுக்கொண்டார்.
0 comments:
Post a Comment