Monday, May 12, 2008

குருவி - விமர்சனம்!

வைர சுரங்கத்துக்காக ஒரு கூட்டம் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் வில்லன். வில்லனிடமிருந்து தனது அப்பாவையும், அப்பாவி ஜனங்களையும் காப்பாற்றும் ஹீரோ. காப்பாற்றும் வேலைகளுக்கு நடுவில் வில்லனின் அழகான தங்கையுடன் காதல். முடிவில் எல்லோரும் எதிர்பார்த்த சுபம்!பழைய பிளாக் அண்டு ஒயிட் ஜெய்சங்கரின் கெளபாய் ஸ்டைல் கதைதான் குருவி. விஜயின் அப்பா மணிவண்ணன் தனது மூன்று மனைவிகளையும், ஒரு டஜன் பிள்ளைகளையும் அம்போவென விட்டுவிட்டு தலைமறைவாகிறார். கடன் தொல்லைக்குப் பயந்து ஓடிப்போனார் என்று நினைத்திருக்க, மலேசியாவில் தான் சந்தித்த தாதா கோச்சாதான் (சுமன்) தனது அப்பாவை அடிமையாக்கி வைத்திருக்கிறான் என்ற விவரம் விஜய்க்கு தெரிய வருகிறது. அப்பாவை காப்பாற்ற வைரச் சுரங்கம் இருக்கும் ஆந்திரா கடப்பாவுக்கு வரும் விஜய் வில்லன்களை அழித்து அடிமைகளை மீட்கிறார்.

ஆட்டத்திலும், அடிதடியிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஜய். அடிக்கடி பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார். என்னதான் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் பல நூறு மீட்டர் பறந்து ரயிலைப் பிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா. விவேக்கிற்கு டபுள் மீனிங் இல்லாமல் டயலாக் பேசவே தெரியவில்லை. த்ரிஷா? நாலே பாட்டோடு ஒதுங்கி விடுகிறார். சுமன் குழந்தையை கையில் வைத்து துப்பாக்கியால் மிரட்டுவதெல்லாம் நம்பியார் காலத்திலேயே பார்த்தாயிற்று. கொண்டா ரெட்டியாக வரும் ஆசிஷ் வித்யார்த்தி சுமனைவிட தேவலை. கல்குவாரி எ·பெக்டில் இருக்கும் கடப்பா லொகேஷனும் அந்த கடப்பா வில்லனும் பக்கா தெலுங்கு ஸ்டைல். குருவியில் குறிப்பிட்டு சொல்லும்படி இருப்பவை வித்யாசாகரின் இசையும், கோபிநாத்தின் கேமராவும். ஒவ்வொரு ஃபிரேமும் அற்புதம். படம் நெடுக பத்தடி தூரத்தில் நின்று விஜயை சுடுகிறார்கள். ஏ.கே.47-ம் உண்டு. ஆனால் ஒரு குண்டு அவர் மீது பட வேண்டுமே? ம்ஹூம்...!ஹைடெக் டெக்னீஷியன்களின் உழைப்பை கந்தலான திரைக்கதை காலி செய்து விடுகிறது. விஜயை நம்பியதில் பாதி கதையையும் நம்பியிருக்கலாம் தரணி.

0 comments:

Free Blog CounterLG