Thursday, May 15, 2008

ஜிம்பாப்வேயின் 500 மில்லியன் டொலர் நோட்டு


உணவகத்தில் சாப்பிடுவதற்காக பணத்தை கட்டு கட்டாக எடுத்துச்செல்கிறார் அந்நாட்டு குடிமகன் ஒருவர்
ஆப்ரிக்கா கண்டத்தின் ஒரு நாடான ஜிம்பாப்வே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 165000 சதவீதம் அதிகரித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வருகிறது. விலைவாசியும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக பணத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதனை சமாளிக்க கடந்த ஜனவரியில் 10 மில்லியன் ஜிம்பாப்வே டொலரை அந்நாடு அறிமுகப்படுத்தியது. கடந்த ஏப்ரலில் 50 மில்லியன் டொலரும் மே 10 அன்று 100 மில்லியன் மற்றும் 250 மில்லியன் டாலர்களை அந்நாடு அறிமுகப்படுத்தியது.

இன்று அந்நாட்டின் ரிசர்வ் வங்கி 500 மில்லியன் ஜிம்பாப்வே டொலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கான அறிவிப்பு அந்நாட்டின் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.

1980 ஆண்டு சுதந்திரம் அடைந்தப் பிறகு அந்நாட்டின் ஒரு ஜிம்பாப்வே டொலர் ஒரு அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்தது. தற்போது உணவு மற்றும் எண்ணெய் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டொலர் இரண்டு அமெரிக்க டொலருக்கு ஒப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG