Monday, April 28, 2008

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை


சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வேலை இழந்து, தங்க இடமும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ் சந்தானகிருஷ்ணன் (27) கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், 2005-ல் அமெரிக்கா சென்றுள்ளார்.


நியூஜெர்சியில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவர், அண்மையில் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், ஆசினிங் என்ற இடத்தில் ஒரு கிடங்கில் தங்கியிருந்த அவர், அத்துமீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வாரம் சிறைவாசத்துக்குப் பின் மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஏப்ரல் 3-ம் தேதி தபன் ஸீ பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்படுத்திய பின்னர், அவரது பெயரை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அறிவித்தனர். கடந்த ஓராண்டாகவே அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்தவர்கள் தெரிவித்ததாக நியூஜெர்சி மாநில போலீஸ் விசாரணை அதிகாரி நோயல் நெல்சன் கூறினார்.

1 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துன்பம், பணந்தேடப் போன இடத்தில்
தேடிய அமைதி கிடைக்கவில்லை. நிரந்தர அமைதி தேடி விட்டார். இவருக்கு நண்பர்களே இல்லையா??
ஏன்? எவருமே வீடாருக்கு அறிவிக்கவில்லை.
வீட்டார் கூட இவர் மாறுபாட்டை கடிதம்,தொலைபேசியில் கவனிக்கவில்லையா??

Free Blog CounterLG