Sunday, April 27, 2008

முதல்வரின் பாராட்டு மழையில் ஜாக்கிசான்!

ஜாக்கிசானின் சிறப்புகளைக் கூறி முதல்வர் கருணாநிதி வெகுவாகப் பாராட்டினார்.

முதலில் ஜாக்கிசானையும், கமல்ஹாசனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமைகளை குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி ஒப்பீடு செய்தார்.


ஜாக்கிசான் பிறந்த தேதி 7.11.1954.
கமல்ஹாசன் பிறந்தது 7.4.1954. கமலை விட ஜாக்கிசான் 7 மாதங்கள் இளையவர்.

கமல் தனது 6-வது வயதிலேயே "களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடிக்கத் தொடங்கியவர். ஜாக்கி சான் 8-ம் வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாக்' படத் தில் நடித்தவர்.

ஜாக்கிசான் 100 படங்களில் நடித்துள்ளார்.
கமலோ இதுவரை 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உங்களது பெற்றோரை அவர்கள் உயிருடன் உள்ளபோதே வணங்கி விடுங்கள் என்று ஜாக்கி சான் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது என்னைக் கவர்ந்தது.

அவரை சூப்பர் ஹீரோ என்று உலகமே கூறுகின்றனர். ஆனாலும், நிஜமான ஹீரோக்களாக அவர் கருதுவது, தீயணைப்புப் படை வீரர்களைத்தான்!.
ரோட்டர்டாம் நகரில் "ஹூ ஆம் ஐ' படப்பிடிப் புக்காக 27 மாடிக் கட்டடத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்தவர் ஜாக்கிசான். எனது ஸ்டண்ட் குழுவினரை நான் குழந்தைகளைப் போலக் காப்பேன்.

அவர்களுக்கு எது நேர்ந்தாலும் நான்தான் பொறுப்பு. என்னால் சாதிக்க முடியாததையெல்லாம் அவர்களை செய்யுமாறு நான் ஒருபோதும் சொன் னது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையில் பிறந்த ஜாக்கிசான்: ஜாக்கிசான் பிறந்தபோது, மகப்பேறுக்கான மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவரது பெற்றோர்கள் இருந்தனர்.

மகப்பேறு சிகிச்சை அளித்த பெண் டாக்டர், ஜாக்கிசானின் பெற்றோர்களிடம், "நீங்கள் மருத்துவக் கட்டணம் செலுத்த வேண்டாம்! எனக்கு குழந்தை இல்லை. எனவே, 1500 டாலர் தருகிறேன். என்னிடம் குழந்தையைக் கொடுத்து விடுங்கள்' என்றார்.

2 நாள்களுக்குப் பின் ஜாக்கிசானின் தந்தை, டாலர் தொகையை வாங்க மறுத்துவிட்டு குழந்தையை மட்டும் கொடுத்துச் சென்றார்.
அந்தக் குழந்தைதான் ஜாக்கிசான்! எதிர்பாராத விதமாக இதுபோன்ற அதிசயங்களால் உலகத்திற்கு கிடைத்த நன்மைகளில் ஒன்றுதான் ஜாக்கி சான்! என்றார் முதல்வர்.

முதல்வரின் பாராட்டை, புன்னகை மலர ஜாக்கி சான் பணிந்து ஏற்றுக்கொண்டார்.

1 comments:

tekvijay said...

u hv ulta ed the b day of jacke and kamal. its kamal who was born on nov. he is younger than jackie

Free Blog CounterLG